அஷ்டமி நவமியில் மாகாண சபையை கூட்டுவதா? உறுப்பினர் அதிருப்தி

  Shanthini   | Last Modified : 10 Jan, 2018 02:00 pm


வடமாகாண சபை கூட்டம் கூட்டப்பட்ட தினம் அஷ்டமி என்பதாலும் அதைத் தொடர்ந்து நவமி  வருவதாலும் சகுணம் சரியில்லை என்று வட மாகாண சபை உறுப்பினர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

2018ம் ஆண்டுக்கான முதலாவது வட மாகாண சபை கூட்டம் நேற்றுக் கூடியது. முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தின்போது, வட மாகாண சபைக்கு வழங்கப்பட்ட நிதி உரிய முறையில் பயன்படுத்தாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பியது தொடர்பாக உறுப்பினர்கள் தங்கள் அதிருப்தியை பதிவு செய்தனர். மேலும் வடமாகாண சபைக்கான அமைச்சர்களை தேர்வு செய்வதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தவறு இழைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினர். 

இப்படி பரபரப்பாக விவாதம் சென்று கொண்டிருக்கையில், உறுப்பினர் ஒருவர் பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. வடமாகாண சபை உறுப்பினர் நவநாதன் பேசுகையில், "வட மாகாண சபையின் கூட்டத்தை, அஷ்டமி நவமியில் தொடங்கியுள்ளீர்கள் இது எங்கு போய் முடியுமோ" என்றார். நவநாதனின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் பதில் தெரிவிக்கவில்லை.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close