இலங்கை நாடாளுமன்றத்தில் கடும் அமளி!

  Shanthini   | Last Modified : 10 Jan, 2018 12:59 pm


மத்திய வங்கி நிதி மோசடி குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மீது விவாதம் நடத்த நாடாளுமன்றத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் சபாநாயகர் கரு ஜய­சூ­ரியவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்று  நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டது.


2018ம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டம் ஆரம்பமானதும், மத்திய வங்கி நிதி மோசடி குறித்த அறிக்கை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் உரையாற்ற தொடங்கினார். ஆனால், மகிந்த தலைமையினலான கூட்டு எதிர்க்கட்சியினர் அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர். காகிதம் உள்ளிட்டவை வீசப்பட்டதாக கூறப்படுகிறது. 


 ரணில் விக்கமிசிங்கவுக்கு எதரான பதாகைகளோடு  கூட்டு எதிர்க்கட்சியினர்  கோஷங்களை  எழுப்பினர்.  இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தார் சபாநாயகர். இது குறித்து ட்விட்டர் பதிவில்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடி சில்வா, 'இது ஒரு அவமானமான செயல்' என்று பதிவிட்டுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close