70வது சுதந்திர ஆண்டு: இந்தியா - இலங்கை கொண்டாட்டம்

  Shanthini   | Last Modified : 10 Jan, 2018 09:34 pm


இலங்கை மற்றும் இந்தியா சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை நிறைவுச் செய்துள்ள நிலையில், அதனைக் கொண்டாடும் விதமாக இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் ஜனவரி 17ம் தேதி சிறப்பு கலாசார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

‘பாலிவுட்டும் அதற்கு அப்பாலும்’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரபல பாலிவுட் பாடகர் கவிதா கிருஷ்ணமூர்த்தி, வயலின் வித்வான் டாக்டர். எல். சுப்ரமணியம், இசையமைப்பாளர் பிந்து சுப்ரமணியம் உள்பட பல முக்கிய இசைக் கலைஞர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கலாசார நிகழ்வு பண்டாரநாயக்க நினைவு மண்டபத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் இருந்த இந்தியா 15 ஆகஸ்ட் 1947 அன்றும், இலங்கை 4 பிப்ரவரி 1948 அன்றும் அதிகாரப்பூர்வமாக சுதந்திரம் பெற்ற நாடுகளாக அறிவிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close