யாழ்ப்பாண மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை - போலீஸார் குற்றச்சாட்டு

  Shanthini   | Last Modified : 12 Jan, 2018 01:08 pm


இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை. இதனால் யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று யாழ். மாவட்ட போலீஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. வாள் வெட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை போலீஸார் தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில், சிறையில் உள்ளவர்களின் பெற்றோருக்கும் போலீஸாருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய, யாழ். மாவட்ட போலீஸ் அதிகாரி விஜிர குணரத்ன, "போக்குவரத்து சட்டங்களை ஓட்டுநர்கள் மதிப்பதில்லை. அதன் காரணமாகவே அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றது. உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்று வாகன ஓட்டுநர்கள் நடந்துகொள்கின்றனர். மேலும் பொதுவாக யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்கள் சட்டம், ஒழுங்கை மதிப்பதில்லை" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close