இலங்கை தமிழகம் இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம்!

  Shanthini   | Last Modified : 12 Jan, 2018 02:32 pm


இலங்கை மற்றும் தமிழகம் இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது.

இலங்கை, கொழும்பு துறைமுகம் மற்றும் தமிழகத்தின் 2வது பெரிய துறைமுகமான தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே வாரம் இரு முறை பயணம் மேற்கொள்ளும் வகையில், எம்.வி.சார்லி என்ற தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த கப்பல் தனது சேவையை தொடங்கியுள்ளது.

இந்த கப்பல் சேவையின் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை துறைமுக விற்பனை மற்றும் தொழில் வளர்ச்சிக்கான தலைமை தலைவர் உபுல் ஜயதிஸ்ஸா, "தொடங்கப்பட்டுள்ள புதிய கப்பல் சேவைக்கு இலங்கை துறைமுக ஆணையத்தால் மிகச் சிறந்த சேவைகள் வழங்கப்படும்" என்றார்.

தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்க இலங்கை அமைச்சரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close