"வெற்றிலையே வேண்டாம்" ராஜபக்சே சூசகம்

  Shanthini   | Last Modified : 12 Jan, 2018 10:14 pm


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே கலந்து கொள்ளும் நிகழ்வுகளில், இன்று முதல் வெற்றிலை பயன்படுத்துவதை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பௌத்த மக்களின் ஒரு வரவேற்பு பொருளாகவும் கவுரவப் பொருளாகவும் வெற்றிலை கருதப்படுகின்றது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சின்னமாகவும் வெற்றிலை உள்ளது.

இந்த நிலையில் வெற்றிலையை பயன்படுத்தினால் அதுவும் சுதந்திரக் கட்சிக்கு பிரசாரமாக போய்விடும் என்ற காரணத்தைக் கொண்டு இனிவரும் நிகழ்வுகளில் வெற்றிலையை தவிர்க்க மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்கட்சி தீர்மானித்துள்ளது. வெற்றிலைக்குப் பதிலாக இனிவரும் காலங்களில் தாமரை மொட்டுக்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் பிரசாரம் மற்றும் பொதுக் கூட்டங்களில் மஹிந்த ராஜபக்சே கலந்துகொள்கின்ற போது, அவரை வரவேற்பதற்காக இதுவரைக் காலமும் வெற்றிலை பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close