இலங்கையில் போதைப்பொருளுடன் இந்தியர் கைது

  Shanthini   | Last Modified : 13 Jan, 2018 02:49 am


220 கிராம் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்திய குற்றச்சாட்டில், கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து இந்தியப் பிரஜை ஒருவர்  போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் சமீபகாலமாக அடிக்கடி இந்தியப் பிரஜைகள் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், 50 வயதுடைய தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒருவகை போதைப்பொருளை இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தி வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர், குறித்த போதைப்பொருளை தபால் உறையில் மறைத்து வைத்துக்கொண்டு வந்துள்ளதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 60 லட்சம் ரூபாய் எனவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப்பொருளானது கிரிஸ்டல் மெத் வகையைச் சேர்ந்ததென்றும் கொழும்பிலுள்ள முன்னணி இரவு கேளிக்கை விடுதிகளுக்கு விநியோகிக்கும் நோக்கில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனவும் போலீஸார்  தெரிவித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close