முல்லைத்தீவில் மீண்டும் சிங்கள மீனவர்கள் ஆக்கிரமிப்பு!

  Shanthini   | Last Modified : 14 Jan, 2018 07:13 pm


இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையின் தென் பகுதியில் இருந்து வரும் சிங்கள மீனவர்கள், ராணுவத்தின் உதவியுடன் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து அங்கு மீன் பிடியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தமது மீன் பிடி தொழில் பாதிக்கப்படுவதாக தமிழ் மீனவர்கள் புகார் அளித்து வந்தனர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில், தென்னிலங்கை மீனவர்கள் இனி தமிழர்களுடைய மீன் பிடி பகுதிகளில் தொழிலில் ஈடுபட மாட்டார்கள் என உறுதியளிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய தினம் முல்லைதீவில் சிங்கள மீனவர்கள் மீண்டும் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் சட்டவிரோத மீன்பிடி செயல்பாடுகளினால், முல்லைத்தீவு, நாயாற்று பகுதி மீனவர்கள் கடந்த பல வருடங்களாக பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close