கொழும்பு வந்த தமிழீழ அரசு உறுப்பினர்... திருப்பி அனுப்ப துடிக்கும் இலங்கை அரசு

  Shanthini   | Last Modified : 14 Jan, 2018 10:53 pm


இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம் வந்த நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவரை, இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுத்த அதிகாரிகள், அவரையும் அவரது குடும்பத்தினரையும் தடுத்து வைத்துள்ளனர். சர்வதேச நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழீழத்திற்காக குரல் கொடுக்க நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ்நாத் ரத்தினபாலன் என்பவர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபியில் இருந்து இலங்கைக்கு சென்றுள்ளார். கொழும்பு வந்த அவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவுதுறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர் பெயர், இலங்கை அரசால் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். 

இயைடுத்து சுரேஷ்நாத் ரத்தினபாலன் மற்றும் அவரது குடும்பத்தினரை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றும் வகையில் அவர்களை விமான நிலையத்திலேயே தடுத்து வைத்திருந்தனர். இதற்கிடையே, தன்னை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்று சுரேஷ்நாத் வலியுறுத்தினார். இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசினார். இதனால், தடை உத்தரவை நீக்கி  அவரை நாட்டுக்குள் அனுமதிக்கலாமா என்பது குறித்து அரசுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சுரேஷ்நாத் ரத்தினபாலன், நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் என்றும், இதனால் இவர் பெயர் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது எந்த ஒரு குற்றவழக்கும் இல்லை என்பதால் அவரை கைது செய்து விசாரணை நடத்துவது போன்ற எந்த ஒரு முயற்சியிலும் அதிகாரிகள் ஈடுபடவில்லை என்றும் இலங்கையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close