முல்லைத்தீவில் தங்க வேட்டையில் ஈடுபட்டுள்ள ராணுவம்!

  Shanthini   | Last Modified : 18 Jan, 2018 11:06 am


இலங்கையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் புதைத்து வைத்துள்ள தங்கம் இருப்பதாக தெரிவித்து, தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.


இலங்கையில் இறுதிப் போர் நடத்த காலப்பகுதியில் மக்கள் தமது பெறுமதிமிக்க பொருட்களை நிலத்தினுள் புதைத்து வைத்தனர். இந்நிலையில் விடுதலைப்புலிகளும் தம்மிடம் உள்ள தங்கம் மற்றும் பணத்தை புதைத்து வைத்ததாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில், முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் மாவட்ட நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் ராணுவம்,போலீஸ் மற்றும் கடற்ப்படை ஆகியோர் இணைந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close