அடுத்த பொது தேர்தலிலும் ஜனாதிபதி போட்டியிடுவார்- லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன

  Shanthini   | Last Modified : 18 Jan, 2018 06:40 pm


இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யவில்லை என்றால், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா போட்டியிடுவார் என்று அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனா, தற்போது இலங்கையின் ஜனாதிபதியாக பதவியில் இருந்து வருகின்றார். கடந்த பல மாதங்களாக தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்து வருகின்றார்.

இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, "2015ம் ஆண்டு ஏனைய கட்சிகளுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குறிய வேட்பாளர் இல்லாததன் காரணமாகவே மைத்திரிபால சிறிசேனா பொது வேட்பாளராக  அறிவிக்கப்பட்டார்.

இந்த ஜனாதிபதி இன்றி அரசாங்கம் அமைக்க முடியும் என்று யாராவது கூறுவார்களாக இருந்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும். பெரும்பான்மையான மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பதவியில் நீடிப்பதையே விரும்புகின்றனர். அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவில்லை என்றார் அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் மைத்திரிபால சிறிசோனா போட்டியிடுவார்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close