தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு- முன்னாள் ராணுவ தளபதியை ஆஜராக உத்தரவு

  Shanthini   | Last Modified : 18 Jan, 2018 11:05 pm


யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், முன்னாள் நாவற்குழி ராணுவ தளபதியை ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்றம் உத்தரிவிட்டுள்ளது. 

கடந்த 1996ம் ஆண்டு நாவற்குழி பகுதியில் ராணுவ தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான ராணுவத்தினர், 24 தமிழ் இளைஞர்களை கைது செய்து தமது முகாமுக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. இதையடுத்து 24 இளைஞர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அவர்களின் உறவினர்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கில் 1996ம் ஆண்டு நாவற்குழி பகுதிக்கு பொறுப்பான இருந்த ராணுவத்தளபதி துமிந்த கெப்பிட்டிவெலான, இலங்கை ராணுவ தளபதி ஆகியோர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று யாழ் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மா. இழஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மா.இழஞ்செழியன், ராணுவ தளபதி துமிந்த கெப்பிட்டிவெலானவை வரும் ஏப்ரல் மாதம் 2ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த காலங்களில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டது குறித்து ராணுவ தளபதிகளுக்கு எதிராக பல மாவட்டங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்ற வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close