பதவி விலகினார் எம்.எச்.எம். சல்மான்!

  Shanthini   | Last Modified : 18 Jan, 2018 06:42 pm


சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது  பதவிக்கு பலர் போட்டி போடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட கூட்டு உடன்பாடின் படி,  முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற  இடங்கள் வழங்கப்பட்டன. அதன் படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சல்மானக்கு வழங்கப்பட்டது. 

இந்நிலையில், சல்மான் தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம்  இன்று வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் பதவியில் இருக்கும்  எம்.ரி.ஹசன் அலிக்கு தனது பதவியை வழங்குவதற்காகவே அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் தனது ராஜினாமா குறித்து இதுவரையில் அவர் எந்த காரணமும் கூறவில்லை. இதையடுத்து அந்த பதவிக்கு அட்டாளைச்சேனை மற்றும் மன்னார் பகுதிகளில் இருந்து போட்டிகள் எழுந்துள்ளது. 

இந்நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சல்மானின் ராஜனாமா மற்றும் பதவி வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close