தமிழர்களின் எதிர்பார்ப்பு எதுவும் நிறைவேற்றப்படவில்லை! - விக்னேஸ்வரன்

  Shanthini   | Last Modified : 19 Jan, 2018 12:12 pm


இலங்கையில் தமிழ் மக்களின் எந்தவொரு எதிர்பார்ப்புக்களும் நிறைவேற்றப்படவில்லை என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

2009ம் ஆண்டு போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின், மீள் குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் பல கோரிக்கைகள் இன்று வரையில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த கோரிக்கைகளை குறித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில், தமிழ் மக்களின் இன்றை நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், 2015 ஆட்சி மாற்றத்தின் பின்பும் நாட்டில் ஜனநாயக சூழல் இல்லை. தமிழர்களின் எந்தவொரு எதிர்பார்ப்பும் நிறைவேற்றப்படவில்லை. போர் முடிந்து தற்போது சுமூகமான சூழல் நிலவுகின்ற நிலையிலும் மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாயக் நிலங்கள் விடுவிக்கப்படவில்லை. மேலும், மீனவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்னைகளுக்கும் தீர்வில்லை. குறிப்பாக பயங்கரவாத தடை சட்டம் இன்னும் இலங்கையில் உள்ளது" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close