ஐ.நாவில் வழங்கிய உறுதிமொழிகளை இலங்கை நிறைவேற்றவில்லை!

  Shanthini   | Last Modified : 19 Jan, 2018 06:22 pm


ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஐ.நா சபையில் நடைபெற்று வந்த கூட்டத்தொடர்களில் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்படும் என இலங்கை அரசு உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. ஆனால் இது குறித்து இதுவரையில் இலங்கை அரசாங்கம் ஒரு முயற்சிகளையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், "இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், மனித உரிமை பாதுகாப்பு, மனித உரிமைகளை உறுதி செய்தல் போன்றவை மீது கவனம் செலுத்த இலங்கை தவறியுள்ளது. பேச்சு சுதந்திரம், ஒன்று கூடல் போன்றவைக்கு சிறிது சுதந்திரம் தற்போது காணப்பட்டாலும் நீதியன முறையில் சட்டங்கள் அமல்படுத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதாக ஐநா சபையில் இலங்கை வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் காலம் தாழ்த்தி வருகின்றது"என குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close