இலங்கையில் வாகன இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு!

  Shanthini   | Last Modified : 19 Jan, 2018 06:14 pm


பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத அனைத்து வாகன இறக்குமதிகளுக்கும் இலங்கையின் நிதித்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

சீட் பெல்ட், பாதுகாப்பு பலூன் ஆகிய பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகனங்கள் இலங்கையில் இறக்குமதி செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த வாகனங்கள் காரணமாகத்தான். இலங்கையில் வாகன விபத்துக்களின் போது அதிக உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டது.

இதைத் தொடர்ந்து கார் இறக்குமதி குறித்து நிதித்துறை அமைச்சகம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "2018 ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகனங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டது. மேலும் ஜனவரி 1ம் தேதி முதல் இந்த தடையை அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்து. ஆனால் வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இந்த முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் சீட் பெல்ட், பாதுகாப்பு பலூன் ஆகிய பாதுகாப்பு விதிகளுக்குட்படாத வாகனங்களை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close