இலங்கையில் கடவுள் பாதம்? மஸ்கெலியாவில் பரபரப்பு

  Shanthini   | Last Modified : 21 Jan, 2018 11:52 am


இலங்கையில் மஸ்கெலியா, வட்மோர் தோட்டப் பகுதியில் ‘கடவுளின்' வலது கால் பாத சுவடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பரவிய செய்தியையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மனிதர்களுடைய பாதச் சுவட்டை விடப் பெரிதாகக் காணப்படும் இந்தப் பாதச் சுவடு, முதலில் கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த அப்பகுதிவாசிகள், உடனடியாக அது குறித்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

இதற்கிடையில் அங்கு கூடிய மக்கள், அது கடவுளின் பாதச் சுவடாகத்தான் இருக்கவேண்டும் என்று எண்ணியதுடன், அதற்கு மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து பூஜையை ஆரம்பித்துவிட்டனர். இந்த பாதம் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close