இலங்கையில் பாதி அரசியல்வாதிகள் திருடர்கள் - மைத்திரிபால சிறிசேனா

  Shanthini   | Last Modified : 22 Jan, 2018 08:38 pm


இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளில் 50 சதவீதமானோர் திருடர்கள் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, மக்களின் பணத்தை திருடியவர்களை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றார். இதில் மட்டக்களப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, " நாட்டில் நடைபெற்று வரும் ஊழலே இலங்கையை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற முடியாமல் இருப்பதற்கு காரணம். 

மத்திய வங்கியின் நிதி மோசடி குறித்த விசாரணை அறிக்கையின்படி, 2008ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை மோசடிகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அப்பாவி ஏழை மக்களின் கோடிக்கணக்கான பணத்தை திருடியவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு வழங்கப்போவதில்லை" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close