ஊழல் ரொம்ப சாதாரணம்: கோத்தபய கருத்து

  Shanthini   | Last Modified : 22 Jan, 2018 10:57 pm


போர் நடைபெறும் காலங்களில் ஊழல் நடைபெறுவது வழக்கமானது என இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். 

கடந்த 2015,16ம் ஆண்டு காலப் பகுதிகளில் இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்ற நிதி மோசடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் தப்பிக்க முடியாதென்றும் அவர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், ஜனாதிபதி மற்றும் பிரதமர், மத்திய வங்கி நிதி மோசடி குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து வருவதோடு, மகிந்த ராஜபக்சே ஆட்சியில் நடந்த ஊழல் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கோத்தபய ராஜபக்சே, "போர் காலங்களில் ஊழல் நடைபெறுவது வழக்கம். கடந்த காலங்களில் போர் நடைபெற்ற நாடுகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளது. மகிந்த ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்கள் பெருமளவில் முன்னெடுக்கப்பட்ட போதும் அதில் குறைபாடுகளும் காணப்பட்டது.

மேலும் இறுதிப் போரில் உயிர்தியாகத்துடன் செயற்பட்ட படையினரை மன அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் மைத்திரி,ரணில் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் உள்ளுராட்சி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close