சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு லட்சம் பொருட்கள் அழிப்பு

  Shanthini   | Last Modified : 23 Jan, 2018 02:50 pm


சீனாவில் இருந்து  இலங்கைக்குள் சட்டவிரோதமாக  கொண்டு வரப்பட்ட சுமார் 31 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இலங்கை சுங்க வரி துறையினால் அழிக்கப்பட்டன.

சர்வதேச சந்தையில், போலியான பொருட்கள் பெருமளவில் நாட்டுக்கு நாடு கடத்தப்படுகின்றன. சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய குறித்த பொருட்களால், சுகாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரமும்  பாதிக்கப்படுகின்றது. 


இந்நிலையில், வரும் 26ம் தேதி கொண்டாடப்படும் சர்வதேச சுங்க வரிதுறை தினத்தை முன்னிட்டு,  இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட போலி மருந்து உள்ளிட்டப் பொருட்களை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.  


இதில் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள், மருந்துகள், வாகன உதிரிப்பாகங்கள், கையடக்கத் தொலைபேசியின் பகுதிகள், மற்றும் உடைகள் உள்ளிட்ட 121,187 பொருட்கள்  அழிக்கப்பட்டன. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close