இலங்கை சிறைகளில் இருந்து 98 தமிழக மீன­வர்கள் விடு­விப்பு

  Shanthini   | Last Modified : 23 Jan, 2018 02:38 pm


இலங்கை கடலில் அத்து மீறி மீன் பிடித்த குற்­றச்­சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 98 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்­றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அறிவித்துள்ளது.

கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின், தமிழக மீனவர்கள் அந்தப்பகுதியில் மீன் பிடிப்பதை இலங்கை கடற்படை தடுத்து வருகின்றது. அதையும் மீறி மீன் பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களை கடற்படை கைது செய்து வருகின்றது. கச்சதீவையடுத்து இலங்கையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண பகுதிகளிலும் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்குள்ள தமிழ் மீனவர்கள் பாதிப்படைவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த ஆண்டு எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 113பேரில் 98 பேரை இந்த வார இறுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்­றொழில் மற்றும் நீரியல் வளத்துறை தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close