இலங்கை அரசின் சதிக்கு இந்தியா துணை போகக் கூடாது- அமைச்சர் அனந்தி கோரிக்கை

  Shanthini   | Last Modified : 23 Jan, 2018 07:28 pm


வடக்கு மாகாணத்தில் நடைபெறும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொது நிகழ்வுகளில், வடமாகாண சபையை புறக்கணித்து தன்னிச்சையாக செயல்பட்டு வரும் மத்திய அரசின் சதிக்கு இந்திய அரசும் துணைபோவது வேதனையளிக்கின்றது என அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 

இன்று வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் அனந்தி,

"யாழ்ப்பாணத்தில் வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ள 9வது சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு வடக்கு மாகாண சபையை புறக்கணித்து நடாத்தப்பட உள்ளது. மக்களால் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட மாகாண சபை நிர்வாகத்தை வேண்டுமென்றே புறக்கணித்து மத்திய அரசு பொது நிகழ்வுகளையும் வளர்ச்சித்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது. இலங்கை அரசின் திட்டமிட்ட இந்த சதி செயலுக்கு இதற்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் துணைபோவது வேதனையளிக்கின்றது. 

வடக்கில் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு அழுத்தங்களை வழங்கிய இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், அதற்கான அதிகாரங்களை வழங்குவதில் மட்டும் மௌனமாக இருப்பது, தமிழர்களுக்கு ஏமாற்றத்தினையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close