இலங்கை சிங்கப்பூர் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

  Shanthini   | Last Modified : 23 Jan, 2018 10:20 pm


இலங்கைக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் பயணம் செய்துள்ளார். அவருக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது. 


இலங்கை ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு இலங்கைக்கு பயணம் செய்துள்ளது. இதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சிங்கப்பூர் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. மேலும் இந்த சந்திப்பில் வர்த்தக ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.


வளர்ச்சி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம சிங்கப்பூர் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஆகியோர் வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர். இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கப்பூர் பிரதமர் மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனிருந்தனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்ல இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் பிரதமர் ஒருவர் 13 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close