மகிந்த, கோத்தாவுக்கு எதிராக வழக்கு! விசாரணை ஆணையம் பரிந்துரை

  Shanthini   | Last Modified : 24 Jan, 2018 12:11 pm


இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்சே ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே ஆட்சியின் போது நடைபெற்ற நிதி மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. அது தொடர்பான விசாரணை ஆணைக்குழு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட விளம்பரங்களுக்கான கட்டணங்கள் செலுத்தப்படவில்லை. இதனால் அரசுக்கு 10 கோடியே 2,158,058 ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இது குறித்து மகிந்த ராஜபக்சேவிற்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். ரக்னா லங்கா மற்றும் அவன்கார்ட் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விமல் வீரவன்ச, பசில் ராஜபக்சே, மகிந்தானந்த அளுத்கமகே, பிரியங்கர ஜயரட்ன, சரத்குமார குணரட்ன உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close