பத்திரிகையாளர் காணாமல் போய் 8 ஆண்டுகள் நிறைவு! அரசு பதில் சொல்லுமா?

  Shanthini   | Last Modified : 24 Jan, 2018 01:02 pm


இலங்கையின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போய் இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டாவது அவரைப் பற்றி விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

லங்காநியூஸ் என்ற இணைய தளத்தில் ஊடகவியலாளராக பணியாற்றிய பிரகீத் எக்னலிகொட, மகிந்த ராஜபக்சே ஆட்சியின் போது, 2010ம் ஆண்டு புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சில மாதங்கள் கழித்து, கொஸ்வத்தை என்ற இடத்தில் வைத்து அவர் காணாமல் போனார். அவரை மகிந்த அரசுதான் கடத்தியுள்ளது பிரகீத் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். 

பிரகீத் காணாமல் போனது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை, எல்லைகள் அற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஆகியன கண்டனம் தெரிவித்திருந்தன. மகிந்த ராஜபக்சே தான் தனது கணவரை கடத்தி வைத்துள்ளார் என பிரகீத்தின் மனைவி பல போராட்டங்களை நடத்தினார். ஐ.நா-விடமும் மனு அளித்தார். ஆனாலும் இதுவரையிலும் பிரகீத் பற்றி எந்த தகவலும் இல்லை. அவர் காணாமல் போய் இன்றுடன் எட்டு ஆண்டுகள் முடிந்துவிட்டது. அவர் என்ன ஆனார், உயிருடன் உள்ளாரா, கொலை செய்யப்பட்டாரா என்று இனியாவது விசாரித்து தகவல் வெளியிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினரும் பத்திரிகையாளர்களும் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்தி 'போர் ஒன்றை வெற்றி கொள்வதற்கான ரகசியங்கள்' என்ற ஆவணப்படத்தை தயாரித்தவர்களில் பிரகீத் எக்னலிகொடவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close