ஒரு நாட்டுக்குள் தமிழ் மக்கள் தீர்வை விரும்புகின்றனர்- இரா.சம்பந்தன்

  Shanthini   | Last Modified : 24 Jan, 2018 10:13 pm


இலங்கை - வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்கள்  ஒரு நாட்டிற்குள் தீர்வைப் பெற விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சிங்கப்பூர் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுன் ஆகியோருக்கிடையில்  சந்திப்பு  ஒன்று நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்னைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பு  குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  செய்திப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலில்,'புதிய அரசியல்  அமைப்பு உருவாக்கம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி செயல்படுத்துவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவும் இணைந்து செயற்பட வேண்டும்.  

புதிய அரசியல் அமைப்புக் குறித்து  சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படும்  தவறான  கருத்துக்கள் நீக்கப்பட  வேண்டும்.  அதேவேளை, தமிழ் மக்கள்  போலியான ஒரு  அரசியல் தீர்வை ஏற்கப் போவதில்லை. இந்த ஆண்டுக்குள் புதிய அரசியல் யாப்பு  கொண்டுவரப்பட  வேண்டும். என சிங்கப்பூர் பிரதமரிடம் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close