முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு வடக்கு முதலமைச்சர் மறுப்பு

  Shanthini   | Last Modified : 24 Jan, 2018 11:13 pm


இலங்கையின் வட பகுதியில் முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக 1000 ஏக்கா நிலத்தை வழங்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் விடுத்த வேண்டுகோள் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், 'இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்டனர்.

மேலும் இவ்வாறு முல்லைத்தீவில் இருந்து வெளியேற்றப்பட்ட 780 குடும்பங்களை மீண்டும் அங்கு குடியமர்த்த 1000 ஏக்கர் நிலம் தேவைப்படுகின்றது. முல்லைத்தீவில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் தற்போது புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்' என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமைச்சர் ரிஷாதின் வேண்டுகோளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார் என ரிஷாத் பதியுதீன் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close