ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு இலங்கை உதவும்- மைத்திரிபால சிறிசேனா

  Sujatha   | Last Modified : 26 Jan, 2018 09:29 am

ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு தேவையான அனைத்து சலுகைகளையும் இலங்கை அரசாங்கம் செய்து கொடுக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வர்த்தக, முதலீடு வாய்ப்புக்களைக் கண்டறியும்  நோக்கில் இலங்கைக்கு பயணம் செய்துள்ள ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, கல்வி, சுகாதாரம், விவசாயம், போன்ற பல்வேறு துறைகளில் ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளுக்கு   நன்றி தெரிவித்தார்.

மேலும் , “இலங்கையின்  வளர்ச்சி திட்டங்களுக்கு ஜப்பானின் ஜய்க்கா (JAICA) நிறுவனம்   வழங்கி வரும் உதவிகள் பாராட்டுக்குரியது.  இலங்கையின் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு தேவையான சகல  உதவிகளும் செய்து கொடுக்கப்படும்” என்றார்.

இதில் கருத்து தெரிவித்த  ஜப்பான் குழு, இலங்கையில் கைத்தொழில், இரும்பு, மென்பொருள், போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள  ஜப்பான் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close