மகிந்தவை வெலி­கடை சிறையில் அடைப்போம்! அமைச்சர் எச்சரிக்கை

  Shanthini   | Last Modified : 29 Jan, 2018 03:10 pm


2018ம் ஆண்டு, மகிந்த ராஜ­பக்சே குடும்­பத்தை வெலி­கடை சிறையில் அடைக்கும் ஆண்டு என சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரிவித்துள்ளார்.

வரும் பிப்ரவரி மாதம், இலங்கையில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதில் ஐக்கிய தேசியக் கட்­சியின் சார்பில் கேகா­லையில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கலந்து கொண்டு உரையாற்றுகையில், மகிந்த ராஜ­பக்சே குடும்­பம் சிறையில் அடைக்கப்படும் என்றார்.

தொடர்ந்து கூறுகையில், "இது தேர்தல் கால­ம். தேர்தலுக்குப் பின்னர் வரும் 2025ம் ஆண்டு வரையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தை பல­ம் பொருந்திய அரசாங்கமாக வழிநடத்திச் செல்வோம். இந்த தேர்தல் மகிந்தவின் மொட்டு சின்­னத்­திற்கு மீண்டும் ஆட்­சியை வழங்­கு­வதா அல்­லது முன்­னெ­டுத்து செல்வதா என்­ப­தனை தீர்­மா­னிக்கும்" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close