ராணுவத்தின் பிடியில் யாழ்ப்பாண மக்களின் 5000 ஏக்கர் நிலம் !

  Shanthini   | Last Modified : 29 Jan, 2018 09:35 pm


யாழ் மாவட்டத்தில் மக்களுக்குச் சொந்தமான 5000 ஏக்கர் நிலங்களை ராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது என யாழ் மாவட்ட அரச அதிகாரி நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த 2009ம் ஆண்டுக்குப் பின், முகாம்களில் தங்க வைத்திருந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர். இன்னும் நூற்றுக்கணக்காணவர்கள் தமது உறவினர் வீடுகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களிலேயே தங்கி உள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள நாகலிங்கம் வேதநாயகம், "மைத்திரி மற்றும் ரணில் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின், 3018 ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 5000 ஏக்கர் நிலம் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் பெண்கள் தலைமையிலான 20,000 குடும்பங்கள் உள்ளது. அந்தக் குடும்பங்களுக்கு வீடுகள் அவசியம் வழங்கப்பட வேண்டும். மேலும் காணாமல் ஆக்கப்பட்டடோரின் 1900 குடும்பங்களுக்கும் வீடுகள் இல்லை" என்றார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close