குவைத்தை விட்டு வெளியேற இலங்கையர்களுக்கு உத்தரவு!

  Shanthini   | Last Modified : 30 Jan, 2018 09:54 am


குவைத்தில் விசா இன்றி சட்டவிரேதமாக தங்கியுள்ள இலங்கையர்களை நாடு திரும்புமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

குவைத்தில் விசா இன்றி தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகள் அங்கிருந்து வெளியேறுவதற்கு பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் 22ம் தேதி வரை இந்த பொதுமன்னிப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த காலப்பகுதியில், விசா காலாவதியான நிலையில் சட்டவிரோதமாக அங்கு தங்கியிருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் காலப் பகுதியில் குவைத்தில் உள்ள வெளிநாட்டவர்களை வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்­வாறு குவைத்தில் இருந்து வெளி­யே­று­வோ­ருக்கு சட்­ட­ரீ­தி­யி­லாக மீண்டும் குவைத் நாட்டுக்குள் வர அனு­மதி வழங்கப்­பட உள்ளது. மேலும் அங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் வழக்குகளில் உள்ளவர்களுக்கு இந்த பொது மன்னிப்பு வழங்கபப்படவில்லை.

குவைத்தில் 15,447 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களை இந்த பொது மன்னிப்பு காலத்தில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close