அரசியல் கைதிகள் விவகாரம் - ஜனாதிபதிக்கு மனு

  Shanthini   | Last Modified : 30 Jan, 2018 01:20 am


இலங்கையில் நீண்ட காலமாக சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, சிறை மாற்றம் மற்றும் மருத்துவம் ஆகியவை குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் எதுவும் இன்றி சிறை வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போதும், இது வரையில் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இந்நிலையில், சிறைவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என தெரிவித்து உடனடியாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என அவர்களின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு வழங்குவதற்காக முதலமைச்சரிடம் அரசியல் கைதிகள் குறித்த மனு ஒன்றை வழங்கியுள்ளனர்.

குறித்த மனுவில், பெரிய குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் போதை பொருள் பயன்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி அவர்களை வேறு சிறைகளுக்கு மாற்ற வேண்டும். விரைவாக அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close