கோத்தபய ராஜபக்சே மனு தள்ளுபடி!

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 02 Feb, 2018 04:45 pm

அவன்ட் கார்ட் வழக்கில் இருந்து தன்னையும், தன்னைச் சேர்ந்த 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கோத்தபய ராஜபச்சே தாக்கல் செய்த மனுவை கொழும்பு உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

கடலில் பயணிக்கும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு சேவை வழங்கும் அவன்ட் கார்ட் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புத் துறை செயாளருமான கோத்தபய ராஜபக்சே உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டின் மூலம் இலங்கை அரசுக்கு ரூ.1140 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கோத்தபய மீது மட்டும் 18 வழக்குகளை பதிவு செய்திருந்தது ஊழல் தடுப்பு ஆணையம்.

இந்த வழக்கு தவறான வழக்கு. அரசியல் காரணங்களுக்காக முறைகேடாகத் தன்மீதும் மற்ற ஏழு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் இருந்து எங்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று கோத்தபய ராஜபக்சே கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோத்தபய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close