பிரதமர் பாதுகாப்பு பிரிவு வாகனம் விபத்துக்குள்ளானது: 5 பேர் காயம்

  முத்துமாரி   | Last Modified : 07 Feb, 2018 12:29 am


பிரதமர் பாதுகாப்பு பிரிவின் வாகனம் ஒன்று மூன்று சக்கர வாகனத்துடன் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். 

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த வாகனம் ஒன்று சிலாவ்-கொழும்பு சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த நேரத்தில் வந்த ஒரு மூன்று சக்கர வாகனம் இதன் மீது மோதியதில் விபத்து ஏற்ப்பட்டது . இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த பாதுகாப்பு சிறப்பு பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி காயமடைந்தார்.

மேலும் மூன்று சக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த 5 பேரும் மறவிலா(Marawila) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேரில் ஒருவருக்கு அதிக காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் கொழும்பு மத்திய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து குறித்து கொழும்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close