விடுதலை புலிகள் மீண்டும் வர வேண்டும்: இலங்கை அமைச்சர் பரபரப்பு பேச்சு

  Newstm Desk   | Last Modified : 03 Jul, 2018 02:27 pm

state-minister-vijayakala-maheswaran-wants-ltte-back

இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ விடுதலைப் புலிகளை மீண்டும் எழுச்சி பெற செய்ய வேண்டும் என்று இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் யாழ்ப்பாணத்தில், அதிபரின் மக்கள் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், "தமிழர்களின் நிலங்களை திரும்பக் கொடுத்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் தலையால் நடந்தே அதிபரை தேர்வு செய்தோம். ஆனால் அதிபர் எங்களுக்கு என்ன செய்தார்?  தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் நாங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும். மே 2009 முன் நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் அருமை இப்போது நன்றாகவே புரிகிறது. 

எனவே வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழ, எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்று நல்ல முறையில் வீடு திரும்ப வேண்டுமென்றால் தமிழீழ விடுதலைப்  புலிகள் மீண்டும் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்க வேண்டும். அவர்களை மீண்டும் வடகிழக்கு மாகாணங்களில் உருவாக்கவேண்டும். மறு எழுச்சி வேண்டும். நாங்கள் உயிருடன் வாழ வேண்டும் என்றால், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்க வேண்டுமாக இருந்தால், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலை சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலை புலிகளின் கை ஓங்க வேண்டும்" என்றார். 

அமைச்சர் விஜயகலா பேசி முடித்தப்பின் அங்கு இருந்தவர்கள் கைகளைத தட்டி ஆரவாரம் செய்தனர். சமீபத்தில் யாழ்பாணத்தில் சிறுமி ஒருவர் பள்ளியில் வன்புணர்வுக்கு உள்ளானதை குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close