இலங்கையின் பிரதமர் நான் தான்; என்னை நீக்க அதிபருக்கு அதிகாரமில்லை: ரணில்

  Newstm Desk   | Last Modified : 27 Oct, 2018 03:48 pm
will-continue-to-be-prime-minister-appointment-of-rajapaksa-is-illegal-and-unconstitutional-says-ranil-wickremesinghe

இலங்கை பிரதமராக தானே தொடர்வேன் என்றும், என்னை பதவியில் இருந்து நீக்க அதிபருக்கு அதிகாரமில்லை எனவும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி, ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சிக்கு அளித்த வந்த ஆதரவை திடீரென வாபஸ் பெற்றதையடுத்து, இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. மேலும், இலங்கையில் கலவரம் ஏற்பட்ட போது  ரணில் விக்ரமசிங்கே சட்டம் ஒழுங்கை சரிவர கையாளவில்லை எனவும், அதேபோன்று தன்னை கொல்ல ஆட்களை அனுப்பியது ரணில் கட்சியினர் தான் எனவும் என அதிபர் சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளார். இம்மாதிரியான காரணங்களால் அதிபர் சிறிசேனா தனது ஆதரவை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது

தற்போது ராஜபக்சே, அதிபர் சிறிசேனா கூட்டணி இணைந்து 95 உறுப்பினர்கள் வைத்துள்ளனர், விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் கட்சிக்கு 106 இடங்கள் உள்ளன. இன்னும் பெரும்பான்மைக்கு 7 இடங்கள் மட்டுமே தேவை. 

'இதனால் ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளது சரியானது அல்ல. அரசியல் விதிகளுக்கு அப்பாற்பட்டது. என்னை நீக்க அதிபருக்கு எந்த அதிகாரமுமில்லை. எனவே நான் பிரதமாராக பதவியை தொடர்வேன்' என ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ரணில் விக்ரமசிங்கே, அதிபர் சிறிசேனாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close