முக்கோண குழப்பத்தில் இலங்கை

  பாரதி பித்தன்   | Last Modified : 28 Oct, 2018 03:17 am

sri-lanka-in-three-dimension-confusion

ஒரு பெண்ணை இரண்டு பேர் காதலித்தார்கள். பஞ்சாயத்து ஊர் பெரியவரிடம் வந்தது. அவர் அடுத்த வாரம் பஞ்சாயத்து பேசிக்கலாம் அதுவரையில் பெண்ணை என் வீட்டில் விட்டு செல்லுங்கள் என்று தீர்ப்பு கொடுத்தாராம். அது போன்ற நிலைதான் கடந்த 26ஆம் தேதி இரவு நடந்தது. அந்த பெரியவர் சுப்பிரமணியசாமியா என்ற கேள்வி உலக அரசியலை கரைத்துக்குடித்தவர்களுக்கு இல்லாமல் இல்லை.

வாஜ்பாய் 13 ஆட்சிகாலம், சுப்பிரமணியசாமி ஒரு டீ பார்ட்டிக்கு ஏற்பாடு  பிசெய்கிறார், அங்கு சோனியாவை, ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். விளைவு வாஜ்பாய் ஆட்சி பறிபோகிறது. சுப்பிரமணியசுவாமிக்கு இயல்பாகவே சீனாவில் செல்வாக்கு உண்டு. கைலாஷ் யாத்திரைக்கு சீனா அனுமதி கொடுத்ததில் சுப்பிரமணியசுவாமி தான் முழுமுதற்காரணம் என்பது அவருக்கு சீனாவில் எந்தளவுக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும்.

இலங்கையை சீனாவும் இந்தியாவும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பல ஆண்டுகளாக இந்தியா இலங்கைக்கு உதவி செய்து வந்தது. அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் இந்தியாவின் பங்கு தான் அதிகம். இது எல்லாம் ராஜீவ்காந்தி இலங்கையில் தாக்கப்பட்டதற்கு முன்னாள் உள்ள நிலை. அதைத் தொடர்ந்து தமிழர் விவகாரம் உச்சம் பெற்றதால் நேரடியாக இந்தியா பல விஷயங்களில் தலையிட முடியவில்லை. அவ்வாறு செய்தால் இந்தியாவின் மத்திய அரசுக்கு தமிழர் விரோத மூகமூடி கிடைக்கும் அபாயம் ஏற்பட்டது. இதனால் இந்தியாவி்ன் உதவி சிறிது குறையத் தொடங்கியது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீனா தன் ஆளுமையை செலுத்த தொடங்கியது. கடந்த 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பிரதமராகவும், அதிபராகவும் ராஜபக்சே இருந்த காலகட்டத்தில் இலங்கைக்கு சீனாவிற்கு இலங்கை முற்றிலும் திறந்து விடப்பட்டது. அந்த காலகட்டத்தில் அம்மாத்தோட்டா துறை முகம், விமானநிலையம், நிலக்கரி மி்ன்நிலையம், மற்றும் சாலைகட்டுமானம் என சீனா 4.8 பில்லியன் டாலர் முதலீடு செய்தது.

இதைத் தவிர போர் உதவி தருவாக சீனா அறிவித்தது. இது சீறிசேனே ஆட்சிகாலத்திலும் தொடர்ந்தது. சீனா உள்ளிட்ட பல நாடுகுளில் இருந்து இலங்கை 55 பில்லியன் டாலர் கடன் பெற்றுள்ளது. இதை 2019ம் ஆண்டில் இருந்து திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம். சீனாவிடம் கடனை திரும்ப செலுத்த முடியாத இலங்கை அம்மாத்தோட்ட துறைமுகத்தை 100 ஆண்டுகள் குத்தகைக்கு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி கடன் கொடுத்து நாடு பிடிக்கும் திட்டத்தை சீனா கடைபிடிக்கும் நிலையில் அமெரிக்காவின் வர்த்தகப் போர் ஆப்பு வைத்தது.

அமெரிக்காவின் வர்த்தகப் போர் மறைமுகமாக சீனாவிற்கு மிப் பெரிய பொரளாதார இழப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அந்த நாடு இந்தியா உள்ளிட்ட பக்கத்துநாடுகளுடன் சமானமாக போக வேண்டிய நிலை. இந்த நிலையில் தான் இலங்கையில் ராஜபக்சே உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெறுகிறார். சீறிசேனாவிற்கும், ரணில் விக்கிரமசிங்கே இடையில் பிளவு அதிகரிக்கிறது. ராஜபக்சே, ரணிலை ஒப்பிடும் போது ரணில் இந்தியாவிற்கு மட்டும் நெருக்கமானவர், ஆனால் ராஜபக்சே இருநாட்டிற்கும் நெருக்கமானவர். அவர் ஆட்சியில் இடம் பெற்றால் சீனா, இந்தியா செக் மேட் விளையாட்டிற்கு உதவும்.

இந்த சூழ்நிலையில்தான் சிறிது காலம் முன்பு ராஜபக்சே சுப்பிரமணியசாமியின் அழைப்பின் பேரில் இந்தியாவந்தார். அவர் பிரதமர், சோனியா, ராகுல் உள்ளிட்டவர்களை சந்தித்து சென்றார். கடந்த வாரம் ரணில் தன் பங்கிற்கு இந்தியா வந்து .சென்றார். இந்த பின்புலத்தில் தான் நேற்று இரவு ரணல் நீக்கப்பட்டு ராஜபக்சே இலங்கையின் பிரதமராக ஆட்சியை பிடித்துள்ளார். அவர் பதவி மறுநாளே அவரை சீனதுாதர் நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார்.

இதன் மூலம் சீனா ராஜபக்சே பின்னால் இருக்கும் என்று தெரிகிறது. ரணில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வாய்ப்பு கோரிய நிலையில் பாராளுமன்றமே முடக்கப்பட்டது. யாழ்பாணத்தில்  போராட்டம் நடத்த மக்கள் தயாராகி வரும் அதே நேரத்தில் இன்று (திங்கட்கிழமை) புதிய அமைச்சரவையை அமைக்க சிறிசேனா எண்ணி உள்ளார். அப்போது தான் இந்த அரசியல் மாற்றத்தால் இந்தியா, சீனா ஆகிய நாடுகளில் எதற்கு பலன் அதிகம் என்று தெரியவரும். அது வரையில் .பெரியவரிடம் பெண்ணை விட்டு சென்ற இரு இளைஞர்கள் நிலைதான் இலங்கைக்கு.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.