பிரதமராக ரணில் விக்ரமேசிங்கே நீடிப்பார்: இலங்கையில் நீடிக்கும் குழப்பம்

  Newstm Desk   | Last Modified : 28 Oct, 2018 03:33 pm
sri-lanka-speaker-recognises-ranil-wickremesinghe-as-prime-minister-three-days-after-his-sacking-by-the-president

இலங்கை சபநாயகர்  கரு ஜெயசூர்யா இன்று அதிபர் சிறிசேனாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தொடர்வார் என தெரிவித்துள்ளார். 

இலங்கையில் உள்நாட்டு அரசியில் குழப்பம் தொடர்ந்து வரும் நிலையில் சபாநாயகர் அதிரடி முடிவு எடுத்துள்ளார். மேலும் நாடாளுமன்ற முடக்கத்தையும் நீக்க அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி தோல்வி அடைந்தது. அவர் பதவி விலகுமாறு அதிபர் சிறிசேனா கோரியும் அவர் மறுத்து விட்டார். கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பிரதமர் ரணிலிடம் இருந்து சட்டம்- ஒழுங்கு துறையை அதிபர் சிறிசேனா பறித்து உத்தரவிட்டார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது ராஜபக்சே கட்சியான, இலங்கை மக்கள் முன்னணி, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அது தோல்வி அடைந்தது. சமீபத்தில் இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்லச் சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதில் விக்ரமசிங்கேயின் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மீது அதிபர் சிறிசேனா பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதனால், கூட்டணிக்குள் பெரும் அதிருப்தி நிலவி வந்தது.

இந்த சூழலில் ஆளும் விக்ரமசிங்கே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக, அதிபர் சிறிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அறிவித்தது. இதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சே வெள்ளிக்கிழமை பதவி ஏற்றது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close