மற்ற நாடுகள் அமைதி காக்க, ராஜபக்சேக்கு முதல் ஆளாய் வாழ்த்து கூறியுள்ள சீனா

  Padmapriya   | Last Modified : 28 Oct, 2018 04:03 pm
turmoil-in-sri-lanka-could-lead-to-closer-china-ties

இலங்கையில் உள்நாட்டு அரசியில் குழப்பம் நீடித்து யார் பிரதமர் என்பதிலேயே குழப்பம் நிலவும் நிலையில், முதல் ஆளாக சீனா ராஜபக்சேவுக்கு நேரில் வாழ்த்து கூறியுள்ளது. 

இலங்கையில் சிறிசேனாவின் சுதந்திரா கட்சியும் ரனில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சியை 2015-ம் ஆண்டு அமைத்தன. அதன்படி பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயும் அதிபராக சிறிசேனாவும் பதவியேற்றனர்.  ஆனால் சமீப காலமாக இருப் பிரிவுக்கும் இடையே கருத்து மோதல் நிலவியது. 

சில மாதங்களுக்கு முன்னர் கண்டியில் புத்த மதத்தினருக்கும், இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட மோதலின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேயிடமிருந்து சட்டம்-ஒழுங்கு துறையை பறிக்கப்பட்டது.  பிறகு சில மாதங்கள் முன்பு விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சிறிசேனா ஆதரவு எம்.பி.க்கள் ஆதரித்தது பெரிய விரிசலை ஏற்படுத்தியது. 

இத்தகைய அரசியல் சூழலில், வெள்ளிக்கிழமை இரவு திடீரென இலங்கை கூட்டணி அரசிலிருந்து விலகுவதாக சிறிசேனா தலைமையிலான சுதந்திரா கட்சி அறிவித்தது. தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை சிறிசேனா நீக்கி, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். இலங்கை அரசியலில் நிலவும் இந்தக் குழப்பம் சர்வதேச அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சிறிசேனா முடிவால் இலங்கை சபநாயகர் கரு ஜெயசூர்யா அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. அதிபர் சிறிசேனாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே தொடர்வார். எனவே நாடாளுமன்ற முடக்கத்தை நீக்கவும் உத்தரவிடுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 

அங்குள்ள சூழல் இவ்வாறு குழப்பத்தில் இருக்க அனைத்து நாடுகளும் அமைதியாக இலங்கையை உற்று நோக்கி வரும் நிலையில், சீன அரசு மட்டும் ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறியுள்ளது.  அந்நாட்டிற்கான சீன தூதர் செங் சியோ, முதல் ஆளாக நேரில் ராஜபக்சேவை சந்தித்து சீன அதிபரின் வாழ்த்து செய்தியை கொண்டு வந்ததாக கூறியுள்ளார். 

இந்திய வெளியுறவுத் துறை அறிக்கை:

இதனிடையே இலங்கையில் நடந்து வரும் அரசியல் மாற்றங்களை இந்தியா கவனித்து வருகிறதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜனநாயக மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில், இலங்கையில் ஜனநாயக மற்றும் அரசியல் அமைப்பு சட்டம் மதிக்கப்படும் என நம்புகிறோம். மேலும், அந்நாட்டு மக்கள் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவும் என்றும் வெளியுறவுத் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close