வேறுவழியின்றி ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்கு: அதிபர் சிறிசேன

  ஐஸ்வர்யா   | Last Modified : 28 Oct, 2018 08:06 pm
maithri-sirisena-explain

என்னை கொல்ல சதி நடந்ததால் வேறு வழியின்றி ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று என அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார். 

இலங்கையில் பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்ற நிலையில், அதற்கான அரசாணையையும் மற்றும் ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கான அரசாணையையும், அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டார். அதை தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் வரும் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கப்படுவதாக, அதிபர் சிறிசேன அறிவித்திருந்தார். 11வது பிரதமராக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுக்கொண்டது அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், இலங்கையின் பிரதமர் நான் தான் எனவும், அரசியல் சாசனப்படி, ராஜபக்சே பதவியேற்றது செல்லாது என கூறி வந்தார்.

இந்நிலையில் அதிபர் சிறிசேன தற்போது விளக்கம் அளித்துள்ளார். அதில்,  “இலங்கையில் என்னை கொல்ல நடந்த சதியில் அமைச்சர் ஒருவருக்கும் பங்கு இருந்தது. கொல்ல சதி நடந்ததால் வேறு வழியின்றி ராஜபக்சேவை பிரதமராக நியமிக்க வேண்டியதாயிற்று. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படியே பிரதமரை மாற்றியுள்ளேன். ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக முடிவு எடுத்ததாலேயே பிரச்னை ஏற்பட்டது. கூட்டாக முடிவு எடுக்கக் கூடாது என்பதில் ரணில் பிடிவாதமாக இருந்தார்”என தெரிவித்திருந்தார். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close