அதிகாரபூர்வமாக பதவியேற்ற ராஜபக்சே: பிரதமர் பணிகளை தொடங்கினார் 

  Newstm Desk   | Last Modified : 29 Oct, 2018 02:59 pm
mahinda-rajapaksa-assumes-charge-as-prime-minister

இலங்கைப் பிரதமராக அதிபர் சிறிசேனாவால் நியமிக்கப்பட்ட ராஜபக்சே இன்று முறைப்படி பொறுப்பேற்று தனது அலுவலக பணிகளை தொடங்கினார். 

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கடந்த 26ஆம் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவை நீக்கி முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவைப் புதிய பிரதமராக நியமித்தார். தானே பிரதமர் எனக் கூறி ரணில் விக்ரமசிங்கே அலுவலகத்தைவிட்டு வெளியேற மறுத்து வரும் நிலையில், சிறிசேனா நாடாளுமன்றத்தையும் முடக்கி வைத்தார். ஆனால் இதற்கு சபாநாயகர் ஜெயசூர்யா முட்டுக்கட்டைப் போட்டார். 

இந்நிலையில் புதிய பிரதமரான ராஜபக்சே இன்று முறைப்படி தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்காக நடைபெற்ற இந்த விழாவில் புத்த பிக்குகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இதனிடையே நாட்டின் அரசியல் நிலவரம் பற்றிப் பேசுவதற்காக இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளின் தூதர்களுக்கும் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அழைப்பு விடுத்துள்ளார். 

இதற்கான கூட்டம் தலைநகர் கொழும்பில் உள்ள அதிபரின் செயலகத்தில் வெளிநாட்டுத் தூதர்களுடனான கூட்டம் நடைபெற உள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close