முன்னாள் கேப்டனும், இலங்கை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க அதிரடி கைது

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Oct, 2018 08:57 am

arjuna-ranatunga-arrested-over-shooting-incident

இலங்கையில் பெட்ரோலிய அமைச்சகத்துக்குள் நுழைய முயன்றதாக நீக்கப்பட்ட அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டார்.

கொழும்பு தெமட்டகொட பகுதியில் உள்ள பெட்ரோலிய அமைச்சகத்திற்கு வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் நேற்று அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு பதற்றமாக சூழ்நிலை ஏற்பட்டதால், ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். 

இலங்கையில் பெட்ரோலிய அமைச்சகத்துக்குள் நுழைய முயன்றதாக நீக்கப்பட்ட அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டார். நேற்று அமைச்சகத்துக்குள் நுழைய முயன்றபோது மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அர்ஜூன ரணதுங்க பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர் ஆவார். மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடதக்கது. 
 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.