அர்ஜூன் ரணதுங்கா ஜாமீனில் விடுவிப்பு

  Newstm News Desk   | Last Modified : 30 Oct, 2018 09:53 am

arjuna-ranatunga-out-on-bail-after-shooting-incident

அமைச்ச ஊழியர்கள் மீதான துப்பாக்கிச்சூடு விவகாரத்தில்  நேற்று கைது செய்யப்பட்ட இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் அர்ஜூன் ரணதுங்காவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது கொழும்பு நீதிமன்றம். 

கொழும்பு தெமட்டகொட பகுதியில் உள்ள பெட்ரோலிய அமைச்சகத்திற்கு வந்த பெட்ரோலியத்துறை அமைச்சர் ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் நேற்று முன்தினம் அங்கிருந்த சில ஆவணங்களை எடுத்துச் செல்ல முயற்சி செய்துள்ளனர். அப்போது அங்கு பதற்றமாக சூழ்நிலை ஏற்பட்டதால், ரணத்துங்கவின் பாதுகாவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும், இருவர் காயமடைந்ததாகவும் தெரிவித்தனர். 
 
இலங்கையில் பெட்ரோலிய அமைச்சகத்துக்குள் நுழைய முயன்றதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் அமைச்சகத்துக்குள் நுழைய முயன்றபோது மோதல் ஏற்பட்டு துப்பாக்கிச்சூடு நடந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவர் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 

அர்ஜூன ரணதுங்க பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவின் ஆதரவாளர் ஆவார். மேலும் இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் என்பது குறிப்பிடதக்கது. 

newstm.in

 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.