இலங்கை நாடாளுமன்ற புதிய சபாநாயகராக தினேஷ் குணவர்தனா

  டேவிட்   | Last Modified : 05 Nov, 2018 03:08 pm
dinesh-gunawardane-as-speaker-of-sri-lankan-parliament

இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபட்சே கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனா நேற்று பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார். 

நாடாளுமன்ற சபாநாயகராக ரணில் விக்ரம்சிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ஜெயசூர்யா இருந்து வருகிறார். அதிபர் சிறிசேனாவால் பிரதமராக மகிந்த ராஜபட்சே தேர்வு செய்யப்பட்ட நிலையில், இலங்கை பிரதமராக ரணில் தொடர்ந்து நீடிப்பதாக கூறி, ஆதரவை அளித்தவர் இவர்.  இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ராஜபட்ச கட்சியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனா நேற்று பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார். 

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கட்சிகளின் கூட்டத்தில், ராஜபட்சவின் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரான தினேஷ் குணவர்தனா இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டு, தற்போது புதிய சபாநாயகராக பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.   
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close