ராஜபக்சேவுக்கு அடுத்த நெருக்கடி! - துணை அமைச்சர் ராஜினாமா

  Newstm Desk   | Last Modified : 06 Nov, 2018 07:26 pm
deputy-minister-manusha-nanayakkara-resigns-from-upfa-government-joins-unp

இலங்கையில் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது அமைச்சரவையில் இருந்து மனுஷா நாணயக்கார விலகியுள்ளார்.

இலங்கையில் பிரதமர் ராஜபக்சே அமைச்சரவையிலிருந்து தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை துணை அமைச்சராக இருந்த மனுஷா நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தில், ராஜபக்சே நியமனம், அரசியலமைப்புக்கு முரணானது.  ஜனநாயகத்துக்கு விரோதமான நியமனம் அது. இதற்கு துணை போக்கூடாது என்பதால் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும், ரணில் விக்ரமசிங்கேவையே சட்டப்பூர்வ பிரதமராக ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க தூதர் சந்திப்பு

இதனிடையே, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு. ஜெயசூர்யாவை இலங்கைக்கான அமெரிக்கா தூதர் அலைனா பி.டெப்லிட்ஸ் சந்தித்து பேசினார். அப்போது, நாடாளுமன்றம் விரைவாக கூட்ட வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அரசியல் நெருக்கடியை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதன் அவசியத்தை பற்றியும் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இலங்கையில் கூட்டணி ஆட்சி நடத்திவந்த பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சிறிசேனாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் அவர் மீதான கொலை சதியையும் ரணில் கண்டுக்கொள்ளவில்லை. இதனால் ரணில் விக்கிரமசிங்கேயை பிரதமர் பதவியில் இருந்து அதிபர் சிறிசேனா அதிரடியாக கடந்த மாதம் 26-ம் தேதி நீக்கினார்.  

மேலும் புதிய பிரதமராக ராஜபக்சேவை தேர்வு செய்தார். பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் ராஜபக்சேயை பிரதமராக நியமித்தது சட்டவிரோதம் என ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ் தேசிய கூட்டணி கட்சியும் குற்றம்சாட்டி வருகின்றன. இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. மேலும், பிரதமராக தாமே நீடிப்பதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் முடிவுகளை ஏற்றுக்கொள்வதாகவும் ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார். இதையடுத்து, நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா முடக்கினார். அதைத்தொடர்ந்து ரணில் விக்கிரமசிங்கே மற்றும் இதர கட்சிகளில் இருந்து எம்.பி.க்களை விலைக்கு வாங்க ராஜபக்சே பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுத்தடுத்து, அதிரடியாக இலங்கை அரசியலில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருவதை சூழலை சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close