நீதிமன்றத்திடம் கருத்து கேட்கும் இலங்கை தேர்தல் ஆணையம்?

  Newstm Desk   | Last Modified : 10 Nov, 2018 09:09 am
sri-lanka-s-election-commission-would-seek-the-supreme-court-s-opinion

இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது சட்ட விரோதமானது என  இலங்கையில் உள்ள சில காட்சிகள் கூறி வரும் நிலையில், தேர்தல் நடத்துவது குறித்து உச்ச நீதிமன்றத்திடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

பரபரப்பான அரசியல் சூழலில், நேற்று நள்ளிரவில் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.  மேலும், வருகிற ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.  

இதையடுத்து, இலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது  சட்ட விரோதமானது என ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்திருப்பதில்,  மனித உரிமை மற்றும் ஜனநாயகம் மீறப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. இதனால், உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுளளது. உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த முடியாது என இலங்கை தேர்தல் ஆணையத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close