இலங்கை அதிபர் செய்த ஜனநாயக பச்சைப்படுகொலை: ஸ்டாலின் கடும் கண்டனம்!

  Newstm Desk   | Last Modified : 14 Nov, 2018 11:02 am
stalin-says-about-srilankan-parliament-dissolved

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை அதிபர் செய்த ஜனநாயக பச்சைப்படுகொலை என அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

இலங்கையில் நடந்து வரும் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு இடையே, நேற்று நள்ளிரவு இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்தார். மேலும் வரும் ஜனவரி 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என அறிவித்த்துள்ளார். இது இலங்கை மட்டுமல்லாமல் உலக நாடுகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மைத்திரிபால சிறிசேனாவின் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளன.

தமிழக அரசியல் தலைவர்களும் இதுகுறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மைத்திரிபால சிறிசேனாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது. இலங்கையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த ஜனநாயகப் படுகொலைக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கையில் ஈழத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close