இலங்கையில் மற்றொரு ட்விஸ்ட்: கட்சி தாவினார் ராஜபக்சே!

  shriram   | Last Modified : 11 Nov, 2018 04:51 pm
rajapaksa-leaves-sirisena-s-slfp-for-slpp

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரளயத்தின் அடுத்த திருப்பமாக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி, இலங்கை பொதுஜன கட்சியில் சேர்ந்துள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, கடந்த மாதம், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை அதிரடியாக பதவியில் இருந்து நீக்கி, ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார். நாடாளுமன்றத்தில், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறி வந்த சிறிசேனா, பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டதால், நேற்று நாடாளுமன்றத்தையே கலைத்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி இலங்கையில் அவரச நாடாளுமன்ற தேர்தல் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சிறிசேனாவின் இந்த முடிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறிய இலங்கை தேர்தல் கமிஷன், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. இந்நிலையில், ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே, சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து, இலங்கை பொதுஜன கட்சியில் நேற்று சேர்வதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சுதந்திர கட்சியில் உள்ள பல எம்.பி.க்கள், தாங்களும், பொதுஜன கட்சியில் சேர்வதாக தெரிவித்தனர். அடுத்ததாக, தானும் இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி, பொதுஜன கட்சியில் சேர்ந்துள்ளதாக மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, கடந்த 2016ம் ஆண்டில், ராஜபக்சேவின் ஆதரவாளர்களுக்காக துவக்கிய கட்சி தான், இந்த இலங்கை பொதுஜன கட்சி. இந்த ஆண்டு நடைபெற்ற இலங்கை உள்ளாட்சித் தேர்தலில், இலங்கை பொதுஜன கட்சி, யாருமே எதிர்பாராத அளவு மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 

வரும் நாடாளுமன்ற தேர்தலில், சிறிசேனாவின் சுதந்திர கட்சியுடன் சேர்ந்து ராஜபக்சே தேர்தலில் நிற்பாரா அல்லது, தனித்து போட்டியிடுவாரா என்பது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close