அடம்பிடிக்கும் சிரிசேனா... இலங்கையில் அடுத்து ராணுவ ஆட்சி..?

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Nov, 2018 04:16 pm
military-rule-next-to-sri-lanka

இலங்கை மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பிரதமர் ராஜபக்‌ஷே இப்போது சட்ட ரீதியில் பதவியில் இல்லை. இதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராவாரா? அல்லது ராணுவ ஆட்சி நடக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பிரதமர் ராஜபக்‌ஷே இப்போது பதவியில் இல்லையென்றாலும் அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முழு பெஞ்ச் விசாரிக்க வேண்டுமென்று ஒரு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அதிபர் சிறிசேனா நேற்று இரவு முப்படைத் தளபதிகளோடு நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் இலங்கையின் சட்டம் ஒழுங்கு முழுப்பொறுப்பையும் ராணுவம் எடுத்துக்கொள்ளுமாறு, நாட்டின் பதற்றமான இடங்களில் ராணுவத்தைக் குவிக்குமாறும் அதிபர் சிறிசேனா அறிவுறுத்தியதாகச் செய்திகள் வெளிவந்தன.

அதிபர் சிறிசேனா மீண்டும் ரனிலை பிரதமர் பதவிக்கு வரவிடக் கூடாது என்று முடிவோடு இருக்க, இன்றைய நாடாளுமன்ற வெற்றிக்குப் பிறகு அதிபர் சிறிசேனாவோடு சுமுகமாகப் பேசி ரனில் அரசைத் தொடருவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயன்று வருகிறது. இதன்படி அதிபரின் நம்பிக்கைக்கு உரிய ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் சிலர் மூலம் இந்தப் பேச்சுவார்த்தையை நடத்துவதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜபக்‌ஷே பெரும்பான்மை இழந்துவிட்ட நிலையில் அடுத்து இயற்கை நீதிப்படி ரணில் ஆட்சி அமைப்பாரா? அல்லது இலங்கை அரசில் ராணுவத்தின் கை ஓங்குமா? என்பதே இலங்கைத் தீவில் எதிரொலிக்கும்  முக்கியமான கேள்வி.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close