இலங்கை நாடாளுமன்றத்தில் பரபரப்பு! எம்.பிக்களுக்கு இடையே கடும் மோதல்!

  முத்துமாரி   | Last Modified : 15 Nov, 2018 12:15 pm
srilanka-parliament-crash-between-ranil-and-rajapaksa

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று ராஜபக்சே பேசிய போது, ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிக்களிடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும், இதில் ரணில் தரப்பு சபாநாயகரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. 

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே-யை பதவி நீக்கம் செய்துவிட்டு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்தார் அதிபர் சிறிசேனா. பின்னர் மக்களின் பல்வேறு போராட்டங்களாலும், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலாலும் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேனா அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், ஜனவரி 5ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அதிபர் அறிவித்தார். 

அதிபரின் இந்த முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் இலங்கை எதிர்க்கட்சிகள் தொடுத்த வழக்கில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கும், தேர்தல் நடத்தவும் இடைகாலத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

பின்னர் நேற்று நாடாளுமன்றம் கூடியதில், ராஜபக்சேவுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக ரணில் தரப்பு சபாநாயகர் கரு ஜெயசூரியா அறிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், அவர் பிரதமர் பதவிக்கு தகுதி இழந்ததாகவும் அவர் அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடிய நிலையில், ரணில் மற்றும் ராஜபக்சே கட்சி எம்.பிகளுக்கு இடையே கடும் மோதல் நிலவியது. நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிய போது, அதை எதிர்த்து ரணில் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த கைகலப்பில் சபாநாயகர் கரு ஜெயசூரியா தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் சபாநாயகர் வெளியேறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close